பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Friday, April 5, 2013

உலகின் மிக லேசான பொருளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை

               பீஜிங்: உலகின் மிக லேசான பொருளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கார்பன் ஏரோ ஜெல் என அழைக்கப்படும் இப்பொருள் காற்றின் எடையை விட 6ல் ஒரு பங்கே எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் ஜி ஜியாங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உலகின் மிக லேசான பொருளை உருவாக்கியுள்ளனர். காற்றின் எடையில் 6ல் ஒரு பங்கு எடையே கொண்ட இந்த ஏரோஜெல் எனப்படும் பொருள் 0.16 மி.கி/கன செ.மீ., எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக மிகவும் எடை கொண்ட பொருளாக கருதப்பட்ட கிராபைட் ஏரோஜெல் எடையை விட கார்பன் ஏரோ ஜெல் மிகவும் எடை குறைவானதாகும். 

 

              முன்னதாக, கடந்த ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கிராபைட் ஏரோஜெல்லை உருவாக்கினர். இதன் எடை 0.18 மி.கி/கன செ.மீ., ஆகும். இத்தகைய ஏரோஜெல்கள், செமி சாலிட் ஜெல்லை காயவைத்து உருவாக்கப்படுகின்றன. இதன்காரணமாக இவற்றின் உட்பகுதிகள் காற்றால் நிரம்பியிருப்பதால், இவை மிகவும் எடை குறைந்ததாக உள்ளன.


        கார்பன் ஏரோஜெல்கள் மிகவும் நீட்சித்தன்மை கொண்டவை. கார்பன் ஏரோஜெல்லை அழுத்தும் போது அதற்கு மீளும் தன்மை உண்டு. எண்ணெய் உறிஞ்சும் தன்மை மிக அதிகம் கொண்ட பொருள் கார்பன் ஏரோஜெல். தற்சமயம் உபயோகத்தில் இருக்கும் எண்ணெய் உறிஞ்சும் கொண்ட பொருட்கள் தனது எடையில் 10 மடங்கு அளவு உறிஞ்சும் தன்மை கொண்டவை. ஆனால் கார்பன் ஏரோஜெல் தனது எடையில் 900 மடங்கு அதிக அளவு எண்ணெய் உறிஞ்சும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பண்பு காரணமாக, மாசு கட்டுப்பாட்டில் இந்த பொருள் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, April 4, 2013

பகைவனுக்கும் உணவிடுங்கள்

*உடைகளுக்காக நீங்கள் கவலைப்படுவானேன்? வயல்வெளியிலுள்ள லீலி புஷ்பங்கள் எப்படி வளர்கின்றன என்று கருதி பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.


*நேர்மையாளனைக் கடவுள் பரிசோதிக்கிறார். ஆனால், துன்மார்க்கனையும் மூர்க்கத்தனத்தில் மோகமுள்ளவனையுமே அவருடைய உள்ளம் வெறுக்கிறது.


*நேர்மையாளனுக்கு வெளிச்சமும், செம்மையாக நிமிர்ந்த நெஞ்சினருக்காக உற்சாகமும் விதைக்கப்பட்டிருக்கின்றன.


*வெளிச்சத்தில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தன் சகோதரனைப் பகைக்கிறவன் இன்னும் இருளிலேயே இருக்கின்றவன் தான்.


*நேசத்தில் பயம் என்பதே இல்லை. பரிபூரணமான நேசம் பயத்தைப் புறம்பாக்கி விடுகிறது. பயம் வேதனையுள்ளது. ஆகையால் பயப்படுகிறவன் நேசத்துக்குப் பூரணமானவல்ல.


*உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடு. அவன் தாகத்தோடிருந்தால் பானம் கொடு. இவ்வாறு செய்வதினால் அவன் தலைமீது நெருப்புத்தணலைக் குவிப்பவனாவாய்.

                                            - பைபிள் பொன்மொழிகள்

பிறருக்கு உதவுவதே நம் கடமை

   ஒருவருக்கும் உதவி செய்யவில்லை என்றால் சேவை செய்யலாம். அதன் மூலம் ஆண்டவனுக்கு தொண்டு செய்தவனாகிறாய்.

 

     நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவி புரிவதும் உலகிற்கு நன்மை செய்வதுமாகும்.


   அறிவாற்றலைப் பயன்படுத்தாமல், கண்மூடித்தனமாக கடவுளை நம்புகிறவனை விட, தன்னுடைய பகுத்தறிவை பயன்படுத்தி கடவுளை நம்பாமலிருக்கும் ஒருவனுக்கு மன்னிப்பு கிடைத்து விடும்.


   வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் தேவை. இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருக்க வேண்டும்.


    மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத்தன்மையை போதிப்பதும், வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்துவது என்று சுட்டிக்காட்டுவதுமே நமது லட்சியமாக இருக்க வேண்டும்.


   நமது வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் தான் உலகம் சிறப்பும் தூய்மையும் பெறும். அதற்காக நம்மை நாம் முதலில் தூய்மைப்படுத்திக் கொள்வதுடன், பரிபூரணமாக்கிக்கொள்ளவேண்டும்.