பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Friday, November 30, 2012

மாணவர் கைவண்ணம்


















  

நன்றி - எஸ். சிதம்பர ஈஸ்வரி, ஆய்க்குடி 

Monday, November 26, 2012

நம்பிக்கை













துபாயில் தொலைந்த இந்தியன்


கோபத்தை குறைக்க சில வழிகள் !



1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள்.  நிதானமாக கோபமூட்டிய

நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.


2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.


3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்


4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்.


5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.


6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்


7. நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு

நன்றி செலுத்துங்கள்.


8. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.



9. சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால்

சற்று நின்று கொள்ளுங்கள்.


10. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.


11. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள். நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம்

நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும்.

 

                                                                     - படித்ததில் பிடித்தது

வித்தியாசமான ஓவியங்கள்








Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்