பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Saturday, December 29, 2012

இறந்த பின் வாழலாம்.......

இறந்த பின் வாழலாம் 

உடல் தானம் செய்வீர்.........

 

உங்களுக்கு வேண்டுமா?

பிறருக்கு அள்ளிக் கொடுங்கள்.............

 

எடுத்துச் செல்வது ஒன்றுமில்லை 

கொடுத்துச் செல்வோம் கண்களிரண்டை ....................


படித்ததில் பிடித்தது 

Thursday, December 27, 2012

விலைவாசி உயர்வு


ஏழைகளின் எமன்

ஏற்றத்தைத் தடுக்கும் பகைவன்

நிலவைக் கூட வாங்கி விடலாம் 

நிலக்கடலை வாங்க முடியாது 

மலையைக் கூட வாங்கி விடலாம் 

மண்ணெண்ணெய் வாங்க முடியாது
 
விண்ணைக் கூட வாங்கி விடலாம் 

விறகு வாங்க முடியாது 

விலை என்னும் மலை 

உளியால் செதுக்கி உடைக்கப்படும் வரை........ 

ஏழைகளின் வாழ்க்கை ரோட்டில் 

ஏளனமாய் நாம் போட்ட ஓட்டில்
 
 ஏழையாய் நிற்கிறோம் நடுக்காட்டில் 

யோசிக்க வேண்டும் வீ ட்டில் 

எதையும் செய்யும் முன் நாட்டில் Friday, December 21, 2012

பார்த்தேன் ரசித்தேன்உலகம் அழிவு தள்ளி வைக்கப்படுகிறது

எல்லோருக்கும் காலை வணக்கம். ஒரு சந்தோசமான விஷயம், இன்று(21-12-2012) உலகம் அழியப்போவதாக கூறியிருந்தோம், அது தவிர்க்க முடியாத ஒரு சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 21-12-3012 க்கு  தள்ளி வைக்கப்படுகிறது. தடங்கலுக்கு வருந்துகிறோம். 

Wednesday, December 19, 2012

பிளாஸ்டிக்கை ஒழிப்போம்


கற்பனையின் உச்சம்

 

இரும்புத் தென்னை மரங்கள்

 

பயிர்கள் நட வேண்டும்  

வயல்காட்டில்.

காற்றாடிகள் நடுகிறார்கள் 

நம் நாட்டில்.

காற்றாடிகள் மின்சாரம் தரலாம் 

மரக்கன்றுகள் போல் 

காற்றைத் தருமா?

மழையைத் தருமா?

இல்லை 

உணவைத் தான் தருமா?

மின்வளம் மட்டும் போதுமா?

மண் வளம் வேண்டாமா?

தென்னை மரங்கள் இல்லை 

எங்கும் காற்றாடிகள் தான் உள்ளன.

காற்றாடிகள் குறையலாம்.

தென்னை மரங்கள் குறையக்கூடாது.

இடத்திற்கு விலை பேசும் 

வீணர்களிடம் 

விலை போக வேண்டாம்.

அவர்கள்  பேசும் விலை 

உங்கள் நிலத்திற்கு மட்டுமல்ல 

உங்கள் உயிருக்கும் தான்...........

மரம் செய விரும்பு

fjitj; jpw fhw;W tul;Lk;…………


jpwe;Njd; fhw;W tutpy;iy


fjitj; jpwe;jhy; NghJkh?


kuq;fis ghJfhf;f Ntz;lhkh?kuk; tsh;g;Nghk;, kdpj tsk; fhg;Nghk;……

 மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் நடிகர் விவேக் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி....வாழ்த்துக்கள்.


Tuesday, December 18, 2012

கொடுப்போம் - பெறுவோம்


 

ngWtjpy; ,y;iy kfpo;r;rp

nfhLg;gjpy; jhd; cs;sJ kdkfpo;r;rp

,d;W eP nfhLj;jhy;

ehis cyfk; cdf;F nfhLf;Fk;

nfhil ts;sy; Fiwe;jhy;

Nfhil fhyk; mjpfhpf;Fk;

,Ug;gijf; nfhQ;rk;(Viof;F) nfhL

,wf;Fk; tiu nfhL

,d;W nfhL, ehis ngW

 

nfhLg;gtNd rpwe;j kdpjd;!!!

ghhp(nfhilts;sy;)=khhp(kio)

 

mLj;j ghhp ePq;fs; jhd;……….

மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை

 

    கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.
 
   முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.

மரம் முழுவதும் மருந்தாக இருக்கும் முருங்கையை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள மறவாதீர்கள்.


Monday, December 17, 2012

இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பில்லை! பயப்படாமல் இருங்கள்

மாயன் வம்சத்தினர் ஒரு காலத்தில் சிறப்பாக வாழ்ந்தவர்கள். அவர்கள் மண்ணியல், விண்ணியல், சிற்பம், ஓவியம், காலக்கணிதம், வடிவ இயல், மாந்திரீகம், கணிதம், அறிவியல் என பல கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர். உயர்ந்த அறிவு படைத்த அவர்கள் ஒரு காலண்டரை உருவாக்கியிருந்தனர். அந்த காலண்டரில் குறிப்பிட்டுள்ளபடியே சில விஷயங்கள் இதுவரை நடந்திருக்கின்றன.

 

அந்தக் காலண்டர் டிசம்பர் 21, 2012 உடன் முடிந்து போகிறது. அதன் பின் ஒன்றுமில்லை. இதனால் உலகம் அழிந்து விடுமோ என்ற பரபரப்பு உருவாகியுள்ளது. இல்லாவிட்டால் அவ்வளவு அறிவு படைத்த மாயன் சந்ததிகள் அந்த காலண்டரின் தொடர்ச்சியாக வேறு காலண்டரை உருவாக்கியிருக்க மாட்டார்களா?

 

அதுசரி, இந்த மாயன்கள் யார்? அவர்களுக்கு எப்படி உலக அழிவை கணித்துக் கூறும் ஆற்றலும்,திறனும் வந்தது? கிறிஸ்து பிறப்பதற்கு கிட்டத்தட்ட 2000, 3000 ஆண்டுகளுக்கு முன், மாயா என்ற இனம் தென்அமெரிக்காவில் இருந்தது. அவர்கள் வானியல் சாஸ்திரம் முதல் புவியியல், விஞ்ஞானம்,சிற்பக்கலை, கட்டடக்கலை என பல கலைகளில் ஆற்றல் மிகுந்தவராக வாழ்ந்தனர்.

 

இவர்கள் உருவாக்கிய காலண்டர் கி.மு. 3113-ல் தொடங்கி கி.பி. 2012 டிசம்பர்21-ம் திகதி முடிவுக்கு வருகிறது. அவர்களது நாள் காட்டியின் முதல் நாள் 0, 0, 0, 0, 0 என்பதில் ஆரம்பிக்கிறது. அது சுழன்று 13, 0, 0, 0, 0 என்னும் இறுதி நாளை அடைகிறது. இதற்கு மொத்தமாக 5125 வருடங்கள் ஆகின்றன.

 

மாயனின் இந்த நாட்காட்டியின் முதல் தேதியான 0, 0, 0, 0, 0 என்பது தற்போதுள்ள நம் நவீன நாள்காட்டியின்படி,கி.மு. 3114-ஐக் குறிக்கிறது. மாயன் காலண்டரின் முடிவடையும் தேதியான 13, 0, 0, 0, 0 நாள் தற்போதுள்ள நமது நவீன நாள்காட்டியின்படி கி.பி. 2012டிசம்பர் மாதம் 21-ம் திகதி 11:11:11 மணிக்கு முடிவடைகிறது.

 

மிகச் சிறந்த வானியல் அறிவு பெற்றிருந்த மாயன் இன மக்கள் 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் திகதியுடன் தங்கள் காலண்டரை முடித்துக் கொள்ள என்ன காரணம்? அன்றுதான் உலகத்தின் இறுதிநாள். அதனால்தான் அவர்கள் காலண்டரில் அதன் பிறகு திகதிகள் இல்லை. அதன் பிறகு இந்த உலகம் இருக்காது இதுதான் மாயன் காலண்டரை நம்புவோரின் நம்பிக்கையாக இருக்கிறது.

 

இது உண்மைதானா?உலகம் அழிந்து விடுமா?

 

நாசா விஞ்ஞானிகள், அதற்கு வாய்ப்பே இல்லை. இதெல்லாம் வீண் புரளி என்கிறார்கள். ஆனால் நம்பிக்கையாளர்கள் பலர், உலகம் அழியாவிட்டாலும் நிச்சயம் அன்று மிகப்பெரிய ஆபத்துக்கள் பூமிக்கு ஏற்படக் கூடும். ஏதேனும் புதிய கிரகங்கள் அல்லது விண்கற்கள் சூரியனுடனோ அல்லது பூமியுடனோ மோதலாம். இதைப்பற்றி மாயன்கள் தங்கள் சிலம்பலம் நூலில் மிகத் தெளிவாகக் குறித்துள்ளனர்.

 

அதன் காரணமாக பூமி சுழற்சியில் அல்லது சூரியனின் பாதையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். ஆபத்துக்கள் நேரலாம் என நம்புகின்றனர். இது பற்றி சென்னை பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் டாக்டர் பி.எம்.அய்யம்பெருமாள் கூறியதாவது:-

 

வருகிற 2012-ம் வருடத்தில் உலகம் அழியும் என்று, சமீபகாலமாக உலகம் எங்கும் தகவல் பரவி வருகிறது. இது வதந்தியா? இல்லது உண்மையா? என்று பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

 

சூரியனில் இருந்துதான் கிரகங்கள் தோன்றி பிரபஞ்சத்தில் இயங்கி வருகின்றன. சூரியன் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனில் இருந்து வினாடிக்கு 750 டன் ஹைட்ரஜன் ஆவி வெளியாகி 746 டன் ஹீலியமாக வெளிப்படுகிறது. மீதமுள்ள 4டன் ஒளியாகவும், வெப்பமாகவும் வெளிப்படுகிறது.

 

விஞ்ஞானிகளின் அதி நுட்ப ஆராய்ச்சியில் இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பே இல்லை. பலர் கூறுவது போல் 2012-ல் கண்டிப்பாக உலகம் அழியாது. 2020-ம் ஆண்டு ஒரு குறுங்கோள் பூமியை தாக்கும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

 

குறுங்கோள் இடம் பெயர்ந்து பூமியை தாக்கும் நிலை ஏற்பட்டால் அக்னி ஏவுகணை மூலமாக குறுங்கோளை பொடிப்பொடியாக தகர்க்கும் சக்தி உலக ஆய்வுக்கூடத்தில் உள்ளது. ஆகவே எந்த சூழ்நிலையிலும் பூமிக்கு ஆபத்து ஏற்படாது என்றார்.

நல்லவர்-செல்வர் -வெல்வர்

 

நல்லவர்-செல்வர் -வெல்வர் 

 சிலர் நண்பர் 

பலர் பகைவர் 
எவர் நண்பர் 
எவர் பகைவர் 
நல்லவர் நண்பர் 
தீயவர் பகைவர் 
நல்லவர் சுடர் 
தீயவர் இடர் 
சுடர் சிலர் 
இடர் பலர் 
கொடுப்பவர் நல்லவர் 
கெடுப்பவர் பகைவர் 
கொடுப்பவர் வெல்வர் 
கெடுப்பவர் வீழ்வர் 
கொடுப்பீர் வெல்வீ ர் எழுதியவர் செந்தில்குமார்

மின் தடை

வாழ்க்கையில் பல தடை 

அதில் ஒரு தடை 

மின் தடை 

ஒரு தடவை 

இரு தடவையல்ல 

ஒரு நாளைக்கு 

பல தடவை 

மின் தடை 

இதற்கு 

இயற்கை - ஒரு விடை 

ஆம் 

சூரியன் - விடை 

 

இயற்கை தரும் விடை 

என்றும் அதற்கில்லை தடை 

இயற்கை - இன்பம் 

செயற்கை - துன்பம்

இயற்கை தரும் மின்சாரம் 

நாட்டின் வளர்ச்சிக்கு வித்தாகும்.

 

 

 

உலகம் அழியும்

 உலகம் அழியும்,  என்று யாராலும் முன்னரே கணித்துக் கூற இயலாது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் உலகம் அழியும். எதையும் நம்மால் மாற்ற முடியாது. இருக்கும் வரை சந்தோசமாக இருப்போம்.

என்னுடைய கருத்து 


Saturday, December 15, 2012

உளமார்ந்த கவிதை - நண்பன்

 

 கவிதைகள் சில எழுதுவதுண்டு 


இது என் உள்ளக் கவிதை உளமார்ந்த கவிதை 


ஒரு நல்ல நண்பன் நூறு உறவினர்களுக்குச் சமம்


எனக்கு நூறு உறவினர்கள் உண்டு 


ஒரு நல்ல நண்பர்(உங்கள்) வடிவில்


நல்லவர்கள் உலகில் இல்லை என்று ஊர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.


அது பொய் என்பதை புரிந்து கொண்டேன்.


நல்லவர்கள் உலகில் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

 

 


மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!


 


      நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினால் மிகையாகாது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.
     இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால் முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

   முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும்தான்.
முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முதுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது.
ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

     இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய தேரன் கண்ட உண்மை என்னும் நூலில்

"மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்"

பொருள்


   முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர்.
அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.

நெல்லிக்கனி - மூப்பை தடுக்கும்முறை


       முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.

   நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.

    ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.
நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம்.

    சங்க காலம் தொட்டு நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றி பாடி உள்ளனர். மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் ‘சி’ உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது.

   100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் ‘சி’, செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:


    அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது. ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

   ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது. எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.

   இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

வாய்ப்புண் தீர


   நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

பித்தம் குறைய


     15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

இரத்த கொதிப்பு நீங்க


      நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

கண் நோய்கள் தீர


   நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

  நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.

நேசியுங்கள் கவிதை மலரட்டும்.

 

யோசித்துப் பார்த்தேன் 

கவிதை மலரவில்லை 

நேசித்துப்  பார்த்தேன் 

கவிதை மலர்ந்தது 

கவிஞனுக்குத் தெரியும் 

கவிதையின் சுவாசம் நேசம் என்று 

அம்மாவை நேசித்தேன் - அன்புக் கவிதை 

நண்பனை நேசித்தேன் - நட்புக் கவிதை 

உறவுகளை நேசித்தேன் - உணர்ச்சிக் கவிதை 

உலகை நேசித்தேன் - சமாதானக் கவிதை 

ஆகவே 

யோசியுங்கள் கண்டுபிடிப்புகள் உருவாகும் 

நேசியுங்கள் கவிதைகள் உருவாகும் 

பிறரை(எதிரியை) நேசியுங்கள் 

அவர்கள் யோசிப்பார்கள் 

 

யோசியுங்கள் கண்டுபிடிப்புகள் உருவாகட்டும் , நேசியுங்கள் கவிதைகள் மலரட்டும்.  


சாக்கடல்

சாக்கடலில் (Dead Sea) ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முடியாது. அக்கடலில் விழுபவர் மிதப்பார். நீங்கள் அக் கடலில் மிதந்தபடி பேப்பர் படிக்க முடியும். உணமையில் அது சாகமுடியாத கடல். சாக்கடல் நீரில் தாங்க முடியாத அளவுக்கு உப்புக்கள் உள்ளன. இதனால் நீரின் அடர்த்தி அதிகம். ஆகவே தான் ஒருவர் அக் கடலில் மிதக்க முடிகிறது. உப்பு அளவு அதிகம் என்பதால் சாக்கடலில் மீன், நண்டு, ஆமை போன்று எவ்வித உயிரினமும் கிடையாது.

எனவே தான் அக் கடலுக்கு அப் பெயர். ஆனால் சாக்கடலுக்கு அடியில் அடை அடையாக நுண்ணுயிர் உள்ளதாக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுளள்து. சாக்கடலில் மிதக்கலாம் ஜெர்மனி, மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு நிபுணர்கள் சாக்கடலுக்குள் இறங்கி ஆராய்ந்த போது தான் கடலுக்கு அடியில் நுண்ணுயிர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டுமன்றி சாக்கடலுக்கு அடியில் நீரூற்றுகள் இருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது உப்பற்ற நல்ல நீராக உள்ளது. இதன் சாம்பிளை அவர்கள் பாட்டிலில் சேகரித்து எடுத்து வந்துள்ளனர். கடல், ஏரி என எந்த நீர் நிலையிலும் ஒருவர் எளிதில் நீருக்குள் இறங்க முடியும். நீரில் விழுந்தால் மிதக்கத்தான் செய்வார் என்ற கடலுக்குள் எப்படி இறங்குவது? ஆகவே நிபுணர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடலுடன் 40 கிலோ எடையைக் கட்டிக் கொண்டனர். ஸ்குபா டைவிங் உடையை அணிந்து கொண்டு இறங்கினர் என்றாலும் விசேஷ ஏற்பாடாக அவர்கள் முகத்தை முற்றிலும் மறைக்கின்ற முக மூடியை அணிந்து கொள்ள வேண்டியிருந்தது. 

சாக்கடல் நீரை இரண்டு முழுங்கு குடிக்க நேர்ந்தால் குரல் வளைப் பகுதி வீக்கம் கண்டுவிடும். அதனால் மூச்சு விட முடியாமல் போகலாம். சாக்கடல் நீர் கண்களில் பட்டால் பார்வை பறி போகின்ற ஆபத்து உண்டு. இந்த நிபுணர்கள் மறுபடி இக் கடலுக்குள் இறங்கி ஆராயத் திட்டமிட்டுள்ளனர். சாக்கடலின் நீரிலும் சேற்றிலும் விசேஷ மருத்துவ குணங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. இச் சேறு சொரியாசிஸ் உட்பட சில தோல் கோளாறுகளைக் குணப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இதற்காகவே ஏராளமான பேர் இங்கு வந்து சாக்கடல் சேற்றை உடலில் பூசிக் கொள்கின்றனர். சாக்கடல் பொதுவில் ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

சாக்கடல் ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கு நடுவே நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்டதாக அமைந்துள்ளது. ஜோர்டான் நதி இக் கடலில் வந்து கலக்கிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் பாசனத்துக்காகவும் குடி நீர் தேவைக்காகவும் நதி மீது இஸ்ரேலும் ஜோர்டானும் பல அணைத் திட்டங்களை மேற்கொண்டன. ஆகவே ஜோர்டான் நதி மூலம் சாக்கடலுக்கு வருகின்ற நீரின் அளவு குறைந்து போய் விட்டது. ஆகவே சாக்கடல் சுருங்கி வருகிறது. சாக்கடலின் நீளம் 67 கிலோ மீட்டர். அகலம் 18 கிலோ மீட்டர். அதிக பட்ச ஆழம் 370 மீட்டர்.