பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Wednesday, December 19, 2012

இரும்புத் தென்னை மரங்கள்

 

பயிர்கள் நட வேண்டும்  

வயல்காட்டில்.

காற்றாடிகள் நடுகிறார்கள் 

நம் நாட்டில்.

காற்றாடிகள் மின்சாரம் தரலாம் 

மரக்கன்றுகள் போல் 

காற்றைத் தருமா?

மழையைத் தருமா?

இல்லை 

உணவைத் தான் தருமா?

மின்வளம் மட்டும் போதுமா?

மண் வளம் வேண்டாமா?

தென்னை மரங்கள் இல்லை 

எங்கும் காற்றாடிகள் தான் உள்ளன.

காற்றாடிகள் குறையலாம்.

தென்னை மரங்கள் குறையக்கூடாது.

இடத்திற்கு விலை பேசும் 

வீணர்களிடம் 

விலை போக வேண்டாம்.

அவர்கள்  பேசும் விலை 

உங்கள் நிலத்திற்கு மட்டுமல்ல 

உங்கள் உயிருக்கும் தான்...........

2 comments:

  1. இயற்கை அழிவை உணர்த்தும் வரிகள். சிறப்பு.

    ReplyDelete
  2. சிந்திக்க வைக்கின்றது.

    ReplyDelete