பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Thursday, October 18, 2012

ROCKET LAUNCH - VISEN-2

தென்றல்

  கவிஞனின்

கண்கள்

வறண்ட பாலையை

கவிதையால்

சோலை செய்யும்

குற்றாலத்தின்

தென்றல்

வறண்ட வாழ்க்கையை

லேசான தழுவலால்

துளிரச் செய்யும்

மலைகள்

காடுகள்

ஆறுகள்

குளங்கள் என உலகின்

அனைத்து மீதும்

தவழ்ந்து விளையாடும் குழந்தை

தென்றல்

வழியில் செல்லும்

அனைவருக்கும்

முத்தமிடும் மழலை

தென்றல்

பூக்களின்  உயிர் தென்றல்

இப்பூவுலகத்தின்  உயிர் தென்றல் 

காற்றில் வரும் தென்றல் 

கல் நெஞ்சைக் கரைக்கும் தென்றல் 

இசைக்கு மயங்காதோர் இருக்கலாம்  

இன்பத் தென்றலுக்கு மயங்காதோர் 

இப்பூவுலகில்  இல்லை 

எங்கே தென்றல் இருக்கிறதோ 

அங்கே மக்கள் கூட்டம் இருக்கும் 


தென்றல் - மழலைத் தழுவல் 

 

 

KEEP YOUR ENEMIES CLOSER


Saturday, October 13, 2012

மின் தடை

வாழ்க்கையில் பல தடை 

அதில் ஒரு தடை 

மின் தடை 

ஒரு தடவை 

இரு தடவையல்ல 

ஒரு நாளைக்கு 

பல தடவை 

மின் தடை 

இதற்கு 

இயற்கை - ஒரு விடை 

ஆம் 

சூரியன் - விடை 

 

இயற்கை தரும் விடை 

என்றும் அதற்கில்லை தடை 

இயற்கை - இன்பம் 

செயற்கை - துன்பம்

இயற்கை தரும் மின்சாரம் 

நாட்டின் வளர்ச்சிக்கு வித்தாகும்.

 

 

 

Friday, October 12, 2012

BE HELPFUL TO OTHERS

 

நாலு நல்லது செய்ய 

நானூறு  தடைகளைச் சந்திக்க வேண்டும்.

தடைகளைச் சந்திக்க துணிவோடு இருங்கள்.


உங்களைப் பார்த்து பொறாமைப் படுபவர்கள் தான் உங்களின் தடை.

 

பொறாமைப்படுபவர்கள் மீது கோபப்படாதீர்கள். அவர்களை  விட நீங்கள் திறமையானவர் என்று நினைப்பதால் தான் அவர்கள் உங்கள் மீது பொறாமைப்படுகிறார்கள்.

 

நல்லது செய்யுங்கள். என்றும் நல்லதே செய்யுங்கள்.

தடைகள் தானாக விலகி விடும். 

 

OPTICAL ILLUSION

FIND THE MOTHER AND CHILD IN THIS FIRST PICTURE

 FIND THE FACE INSIDE THIS COFFEE NUT

 FIND THE OLD MAN IN THIS NATURE PICTURE


Friday, October 5, 2012

TAKE A LOOK AT FORESTகாட்டைக் கொஞ்சம் பாருங்கள் 

கிளிக் 


BE KIND
BLESSINGS

வாழ்த்து 

 

 

அன்று 

பதினாறு பெற்று பெருவாழ்வு 

வாழ்க என்று வாழ்த்தினர்.

 

இன்று 

இரண்டுக்கு மேல் பெற்றால்   

உனக்கில்லை வாழ்வு என்று எச்சரிக்கின்றனர்.

TWO WHEELER  இரு சக்கர வாகனம் 

 

 

 

 

இரு சக்கர வாகனம் 

இளைஞர்களின் இதயம் 

ஓட்டும் போது கவனம் 

சாலையில் முறையாக ஓட்டினால் 

பறக்கும் விமானம் 

கொஞ்சம் தவறினால் 

நொடியில் மரணம் 

நம் நேரத்தை மிச்சமாகும் 

தூரத்தைக் குறைக்கும் 

அழகாக இருக்கும் 

ஆபத்தை அழைக்கும் 

ஓட்டும் போது கவனம் 


Thursday, October 4, 2012

VOTER LIST CHECK

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரி பார்க்க வேண்டுமா?

 

 

 இங்கே கிளிக் செய்யவும்..... 

Wednesday, October 3, 2012

BEAUTY

கோபம் வரும் பொழுது இந்த மலரைக் கொஞ்சம் பாருங்கள் 

 

 

மேலும் பார்க்க......       இங்கே கிளிக் செய்யவும்.....

RAMANUJAM

தமிழ் நாட்டைப்  பெருமைப் படுத்திய ராமானுஜம் 

 

இங்கே கிளிக் செய்யவும் 

Monday, October 1, 2012