பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Monday, December 30, 2013

HAPPY NEW YEAR 2014




இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

Wednesday, December 11, 2013

வீட்டின் அருகில் பள்ளி....ஆதரிப்பீர்




வீட்டின் அருகில் பள்ளி இருக்க

பஸ்சில் 

பச்சிளம் குழந்தைகளுக்கு 

பல மைல் தூரப் பயணம் எதற்கு?

படிக்கும் பிள்ளை எந்தப் பள்ளியில் 

இருந்தாலும் படிக்கும்.

படிப்பு முக்கியம் 

உயிர் அதை விட முக்கியம்.


இன்று எங்கள் ஊரின் அருகில், பள்ளிப் பேருந்தும், பால் 
வண்டியும் மோதி விட்டது. அதிர்ஷ்ட வசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.




Thursday, December 5, 2013

நாடெல்லாம் பதிப்பகம்



நாட்டில் சில பதிப்பகம் என்பது 

நாடெல்லாம் பதிப்பகம் ஆனது 

முகநூல் ஒரு பதிப்பகம் 

வலைப்பூ ஒரு பதிப்பகம் 

தலைப்புக்கொரு பதிப்பகம் 

தடை இல்லா பதிப்பகம் 

பத்து பைசா செலவில்லை 

பதிப்பகத்தார் படியேறத் தேவை இல்லை 

லட்சம் காபி அடிக்கலாம் 

பதிப்பிக்க வேண்டும் என்ற 

லட்சியத்தை அடையலாம் 

அனுபவத்தை பகிரலாம் 

அனைவரின் கருத்தை கேட்கலாம்

நண்பர்களே ஒன்று கூடி வாருங்கள்

நல்ல பதிப்புகள் பல படைப்போம்

நாளும் நாட்டு மக்களுக்கு 

நல்ல கருத்துக்களை பதிப்பிப்போம் . 

Wednesday, December 4, 2013

நன்றி சொல்லுங்கள்.......






நன்றி சொல்வதும், உதவி செய்வதும் கூட ஒரு சுயநலம் தான்.

ஏன் என்றால்,  இன்று ஒருவர் உங்களுக்கு செய்த உதவிக்கு நன்றி சொன்னால் தான், உதவி செய்த நபர் இதே போல் இன்னும் பல உதவிகளை செய்வார். அதனால் நன்றி சொல்லுங்கள் நம் சுய நலனுக்காக.


நன்றி சொல்லுங்கள், நல்லது செய்த நண்பர்களுக்கும், கடவுளுக்கும்.....



வித்தியாசம் (காதல் - கல்யாணம்)




சத்தமில்லாமல் கண்களால் பேசினால் காதலர்கள் (காதலிக்கும் போது)  




சத்தம்போட்டு வாயால்(கையால்) பேசினால் தம்பதிகள்(கல்யாணத்திற்கு பின்பு)


Monday, December 2, 2013

தேடல்.........





வண்டு பூக்கள் பல நாடுகிறது 

சிறு தேனுக்காக............ 

என் எண்ணம் வார்த்தை பல தேடுகிறது 

சிறு கவிதைக்காக.........


Friday, October 18, 2013

பொறுமை ................




தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம்,
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்தால்......... 





Friday, October 11, 2013

ஆசிரியர்களின் உண்மை நிலை..........


என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை.



மாணவர்கள் கொலை செய்யக் கூட துணிந்து விட்டார்கள்.

மாணவர்களிடம் பேசுவதற்க்கே பயமாக இருக்கிறது .

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் -  ஆசிரியர்களின் ஆசிரியர்கள் ஆகி விட்டார்கள்.

என்றைக்கு ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக் கூடாது என்ற நிலை வந்ததோ, அன்றிலிருந்து மாணவர்கள் செய்யும் குற்றங்கள் அதிகமாகி விட்டது.

மனம் மிகவும் வேதனை அடைகிறது.

இறக்கும் ஒரு நல்ல மனிதன், மேலும் ஒரு பத்து ஆண்டுகள் வாழ்ந்தால் இன்னும் எவ்வளவு நல்ல செயல்கள் நடக்கும்.    

என் மகனுக்கு, எல்லா வசதியும் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்து, குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே எல்லா வசதிகளையும்  செய்து கொடுத்தால் அவர்கள் ஏன் தப்பு செய்ய மாட்டார்கள்.
   
மாணவனை அடித்தால் ஏன் அடித்தீர்கள் என்று ஒரு புறமும், அடிக்கவில்லை என்றால் ஏன் அடித்து சொல்லிக் கொடுக்கவில்லை என்றும் மறுபுறமும், கேட்க என்ன செய்வதென்று தெரியாமல் ஆசிரியர்கள் திண்டாடி வருகின்றனர்.

மேலும் ஒரு மாணவன் தப்பு  செய்தான் என்று சொல்லி வகுப்பறைக்கு வெளியே நிற்கச் சொன்னால், அதை தலைமை ஆசிரியர் பார்த்தால் அனைத்து மாணவர்கள் முன்பாகவும் தலைமை ஆசிரியர்,  அந்த வகுப்பு ஆசிரியரை திட்டி விட்டு, தப்பு  செய்த அந்த  மாணவனை வகுப்பறைக்குள் போகச் சொன்னால், எப்படி அவன் திருந்துவான். மேலும் அதைப் பார்த்து மற்ற மாணவர்களும் நாம் தவறு செய்தால் யாரும் நம்மை ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்று நினைத்து அவர்களும் தப்பு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

கடைசியில் தப்பு செய்த மாணவன் ஆசிரியரைப் பார்த்து கேவலமாக சிரிக்கிறான், 

இது தான் இன்றைய ஆசிரியர்களின் உண்மை நிலை.

கடவுளே 19ஆம் நூற்றாண்டு காலத்து பள்ளிக்கூட அமைதி திரும்ப வராதா?
  
  

Monday, September 23, 2013

சமையல் எரிவாயு மானியம்......

உங்களுடைய வீட்டின் சமையல் எரிவாயு இணைப்பு எண்ணையும் , வங்கி கணக்கு எண்ணையும் ஆதார் அட்டையுடன் இணைத்து மத்திய அரசின் மானியத்தை நேரடியாக உங்களுடைய வங்கி கணக்கில் பெற வேண்டுமா? கீழே கிளிக் செய்யவும்.   











Friday, September 20, 2013

இதயம் பேசுகிறது





உலகின் தொடர்பு இணையம் 

உடலின் தொடர்பு இதயம் 

உணர்வுகளின் உதயம்  - இதயம் 

நம் உயிர் அதன் பிணையம் 

அளவில் சிறியது 

உடலின் அனைத்து அதிகாரமும் கொண்டது 

சுருங்கினால் சிஸ்டோல்

பழைய நிலைக்குத்  திரும்பினால் டைய்ஸ்டோல் 

லப் டப்  இதன் ஒரு மொழி 

இதற்கில்லை மறு மொழி 

லப் என்றால் நீண்டு ஒலிக்கும்  

டப் என்றால் குறுகி ஒலிக்கும் 

நம் உயிர் இதயத்தில் 

இதயத்தின் உயிர் நம் மணிக்கட்டில் 

உடல் உறுப்புகளுக்கு இரத்தம் அனுப்பும் 

நிமிடத்தில் 72முறை துடிக்கும் 

இரக்கம் உண்டு, உறக்கம் இல்லை 

நம் வாழ்வு, இதய வால்வில் உள்ளது 

வால்வில் அடைப்பு, உண்டாக்கும் மாரடைப்பு 

நல்ல இதயம் = நல்ல உணவு, நல்ல உடற்பயிற்சி 


இதயம் இல்லையேல், உயிர் இல்லை  



Thursday, September 19, 2013

பிறர் நிழல் வேண்டாம் ......



மரம் நிழல் தரலாம் 

மரத்துக்கு நிழல் தரக் கூடாது 

நிழலில் வாழும் மரம் நன்றாக வளர்வதில்லை 

மனிதா 

பிறர் நிழலில் வாழாதே ........... வளரமாட்டாய் 

Tuesday, August 6, 2013

ஆதார் - Online Appointment

ஆதார் அடையாள அட்டையைப் பெறுவதற்கு ஆன்லைனில் அனுமதி (Appointment)  பெறுவதற்கு


CLICK HERE



Monday, August 5, 2013

VOTER ID ONLINE TRACK...


வாக்காளர் அடையாள அட்டையை ONLINE-ல்  TRACK செய்வதற்கு 


CLICK HERE

ஆதார் அடையாள அட்டையை ஆன்லைனில் பெறுவதற்கு....



ஆதார் அடையாள அட்டையை ஆன்லைனில் பெறுவதற்கு.

(ஏற்கனவே பதிவு செய்து, பதிவு எண் கொண்டவர்கள் மட்டும்.)



ஆதார் அடையாள அட்டையின் தற்போதைய 

நிலையை  ஆன்லைனில் சரி பார்ப்பதற்கு. 

Provident Fund(PF) கணக்கில் எவ்வளவு தொகை?


உங்களுடைய Provident Fund(PF)  கணக்கில் எவ்வளவு தொகை 

உள்ளது என்பதை அறிய வேண்டுமா?


 CLICK HERE

Tuesday, July 23, 2013

நாடகம் தேவையா?


போலிக் கண்ணீர் வடித்து 
பலர் குடும்பத்தை நடுத் தெருவில்
நிற்க வைக்கும்
நாடகம் தேவையா?

நெஞ்சம் குமுறுகிறது

பகல் முழுவதும் அல்லல் பட்டு 
வீட்டில் சில மணி நேரமே 
ஓய்வெடுக்கும் ஆண்கள் பலர் 
நிம்மதி கெடுத்து 
பணம் சம்பாதிக்கும்
நாடகத்தை பார்த்து நாம் 
எதற்கு அழ வேண்டும்

மனம் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சிகள் பல இருக்க
நம் நிம்மதி சிதைக்க வைக்கும் நாடகம் தேவையா?

பலர் குடும்பம் பிரிய 
குழுவாய் சேர்ந்து நீலிக் கண்ணீர்
வடிக்கும் - நாடகம் தேவையா?

கணக்கிட்டுப் பாருங்கள் பத்து நிமிடத்தில் 
பலர் குடும்ப நிம்மதி கெடுக்கும் 
நாடகம் - ????????????????????

Friday, July 12, 2013

என் அப்பாவிடம் கேட்டேன்...

 

என் அப்பாவிடம் 

 

எனக்கு பிடித்த லட்டு கேட்டேன்...
வாங்கிகொடுத்தார் 

எனக்கு பிடித்த பொம்மை கேட்டேன்...
வாங்கிகொடுத்தார் 

எனக்கு பிடித்த புத்தாடை கேட்டேன்...
வாங்கிகொடுத்தார்  

எனக்கு பிடித்த சைக்கிள் கேட்டேன்...
வாங்கிகொடுத்தார்
 

எனக்கு பிடித்த இரு சக்கர வாகனம் கேட்டேன்...
வாங்கிகொடுத்தார்

இப்படி எல்லாம் வாங்கி கொடுத்த என் அப்பாவிடம் 

எனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கச் சொன்னேன்.

முடியாது என்று சொல்லி விட்டார்.

என்னோடு சில நிமிடங்கள்(அ)சில நாட்கள் இருக்கும் எனக்கு பிடித்த
எல்லாவற்றையும் வாங்கி கொடுத்த என் அப்பா..........

என் வாழ்நாள் முழுவதும் என்னோடு இருக்கும் எனக்கு பிடித்த
பெண்ணை திருமணம் செய்ய மட்டும் ஏன் மறுக்கிறார்?

அவர் (அ) அவர்கள்  மட்டும் சரி என்று சொல்லி இருந்தால்

பலர்

காதல் திருமணம்  - நிச்சயிக்கப்பட்ட திருமணமாக மாறியிருக்கும். 

Saturday, July 6, 2013

தோழா .........


தோழா .........

நீ இல்லாமல் நேரம் போகவில்லை 

நீ இருந்தால் நேரம் போதவில்லை.......... 



Tuesday, July 2, 2013

பதில் சொல்லுங்கள் பார்போம் ...............

அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு 

வந்த ஒரு இளைஞனை அக்கா காதலிக்கிறாள்.

இறுதிச் சடங்கிற்கு வந்து சென்ற இளைஞனை(காதலனை)

மணம் முடிக்க நினைத்த அக்கா 

எங்கு தேடியும் அவன் கிடைக்காமல்,

கடைசியில் தன் தங்கையை கொன்று விடுகிறாள்.

ஏன் அவள் தன் தங்கையைக் கொன்றாள்?

ஒரு நேர்முகத் தேர்வில் கேட்க்கப்பட்ட கேள்வி இது ?

பதில் சொல்லுங்கள் பார்போம் ...............


வெ. இறைஅன்பு 

நல்ல கதை



ஒரு சுத்தி 

சின்ன சாவியைப் பார்த்து கேட்டது.

எவ்வளவு தான் அடித்தாலும் என்னால் ஒரு பூட்டை திறக்க முடியவில்லை.

இவ்வளவு சிறியதாக இருக்கும் நீ,

அவ்வளவு பெரிய பூட்டை எளிதாக திறந்து விடுகிறாய். 

அது எப்படி சாத்தியமாகிறது?  என்று கேட்டது.

அதற்கு அந்த சாவி சொன்னது .

நீ வெளியில் இருந்து வேலை செய்கிறாய்.

நான் உள்ளே சென்று வேலை செய்கிறேன்.

அதனால் தான் என்னால் பூட்டை எளிதாக திறக்க முடிகிறது என்று சொன்னது.

எந்த ஒரு பிரச்சனையையும் நாம் மனதின் உள்ளே கொண்டு செல்லும் போது, அதற்கு எளிதில் தீர்வு காண முடிகிறது. 


கதை : வெ . இறைஅன்பு  

  

புதிய தலை முறை - என் வாழ்த்துக்கள்

உத்தரகாண்டில் புதிய தலை முறை


நிகழ்ச்சி மிக அருமை .............


புதிய தலை முறை




உன்னோடு நாங்கள் இருக்கிறோம்


இளைய தலைமுறை 


தொடரட்டும் உன் சமூகப் பணி ...........


புதிய தலை முறை - உன் பணி தொடரட்டும் பல தலைமுறை 


Saturday, June 29, 2013

ஆண்பால் - தாய்ப்பால்

ஆண்பால் பெண்பால் 
அன்பால் கலந்தால் 

பெறும்பால் 
ஆண்பால் ஆனால் 
கொடுப்பாள் தாய்ப்பால் 

பெண்பால் ஆனால் 
கொடுப்பாள் கள்ளிப்.........

நிறுத்துங்கள் 
அது விஷம்............ 


படித்ததில் பிடித்தது 

இறைவன் - குயவன்


இறைவன் எனும் குயவன் 

வடித்த சிலை 

மனிதன்......................




Friday, June 28, 2013

எங்க ஊரு அழகான ஊரு - குற்றாலம்



மலை பாரு 
மழை பாரு 
மழையோடு சாரல் பாரு  
ஆறு பாரு  
குளம் பாரு 
வயல் பாரு 
வயலில் அழகான பயிர் பாரு 
வயல் நடுவில் ரெயில் ரோடு பாரு 
எங்கு பார்த்தாலும் பச்சை பாரு 
எல்லாம் ஜோரு 
எங்க ஊரு அழகான ஊரு 
நாட்டு மக்கள் பலர் கூடும் ஊரு 
எங்க ஊரு நல்ல ஊரு  
எங்க ஊரு பேரு 

- குற்றாலம்  


Thursday, June 27, 2013

பொறியியல் படிப்பு படிக்க வெச்சா நல்லது தான்....ஆனால்...

அஞ்சு பைசா 
பத்து பைசா 
வட்டிக்கு கடன் வாங்கி 
கடன் கிடைக்கலனா
கந்து வட்டி கடன் வாங்கி 
அம்மா தங்கத் தாலி அடகு வச்சு 
+1 ல் பெயில் ஆகி 
+2 ல் விளிம்பில் பாஸ் ஆனா தன் பையனை 
பக்கத்துக்கு வீட்டில் ரெண்டு பேரு 
எதிர்த்த வீட்டில் மூணு பேரு 
பொறியியல் படிப்பு படிக்கிறான்னு 
படிக்காத தன்  பையனை, 
பட்டிணத்தில் பொறியியல் படிப்பு படிக்க வச்சா?
அவன் எப்படி படிப்பான்? 
முதலாண்டில் பத்து பேப்பர் 
இரண்டாமாண்டில் எட்டு பேப்பர்
நான்காண்டு முடித்து 
வெளியில் வரும் பொழுது பதினெட்டு பேப்பர்
அரியர் வைப்பான் 
படிக்க வெச்சா நல்லது தான்
அவன் திறமைகேற்ற(அறிவுக்கேற்ற)
படிப்பு படிக்க வெச்சா நல்லது தான்
உங்க ஆசையை குத்தஞ் சொல்லவில்லை 
பணம் கொடுத்தா படிக்க சீட்டு கிடைக்கும் 
படிக்கலனா எப்படி பட்டம் கிடைக்கும். 

தப்பாக நெனைக்க வேண்டாம், 

யோசிச்சு பாருங்க 

உங்க பையன் வாழ்க்கை  நல்ல இருக்கும். 

அவன் திறமைகேற்ற படிப்பு படிக்க வெச்சா......................

Wednesday, June 26, 2013

சூரியகாந்தி





எனக்கொரு காதலி

வட்ட முகம்

மஞ்சள் நிறம்

தேன் சுறக்கும் இதழ்

தேனீ க்கள் அவள் விசிறிகள்

சாலையில் செல்லும் என்னை தலை அசைத்து அழைப்பாள்

உன்னோடு நானும் வருகிறேன் என்பது போல் விழிப்பாள்

தென்றல்  அவளை வருடும் 

சாரல்  அவளை  நீராட்டும் 

சூரியன் அவளை உயிர்ப்பிக்கும் 

அவள்  அழகில் என் இதயம் தொலைத்தேன்.

அவள் தலை அசைத்தாள், நான் தலை சுற்றிப் போனேன். 


Monday, June 24, 2013

ஹைக்கூ

சாராயம்


வாழ்க்கை 


விரையம் 


சாராயம் .......................


வரதட்சணை


பெண்ணுக்கு 


வேண்டும் தட்சணை 


வேண்டாம் வரதட்சணை...............



காற்றாடி


வயல்காட்டில் 


நட வேண்டாம் 


காற்றாடி.............



குழந்தை


அழுக்கும் 


அழகு 


குழந்தை .............................


Friday, June 14, 2013

வலைப்பூ




நல்ல பல பதிப்பு தாங்கும் - ஒரு இணைப்பு 

எப்போதும் எனக்கு - உன் நினைப்பு
என் படைப்பை உலகம் பார்க்க வைக்கும் - ஒரு இணைப்பு 

உன்னால் நண்பர்கள் பலருடன் நல்லதொரு - பிணைப்பு 

வலைப்பூ - உலகத்துடன் எளியதொரு - இணைப்பு 

நல்ல பல தகவல்கள் பகிரும் ஒரு இணைப்பு 

வலைப்பூ தரும் செய்தியெல்லாம் - இனிப்பு 

என் சிறிய படைப்பு உலகத்துடன் இணைப்பு - அது வலைப்பூ 

வலைப்பூ - பலர் உழைப்பு 

நல்ல ஒரு படைப்பு - வலைப்பூ 



Wednesday, June 12, 2013

சிந்திப்போம், சிந்திக்க வைப்போம்

சிந்திப்போம், சிந்திக்க வைப்போம்  

புத்தகம் வாசிப்பதற்கு 




Monday, June 10, 2013

தமிழனே - தமிழனாயிரு

தாய் மொழியை மறந்தால் நம் அடையாளத்தை தொலைத்து விடுவோம்.

கவிஞர் வைரமுத்து.


தமிழனே  - தமிழனாயிரு 

நம் திறமை கண்டு,  உலகமே நம்மை வியந்து  பார்த்துக் கொண்டிருக்கிறது.  


நாம் ஆங்கிலம் கற்காமல், ஆங்கிலேயனை தமிழ் கற்கச்  செய்ய வேண்டும்.

 

Wednesday, June 5, 2013

கொஞ்சம் இதைப் படியுங்க.........

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 


ரொம்ப ரொம்ப நல்ல சட்டம்.

நாம் எல்லோரும் இனிமேல் எல்லா தகவலையும் எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.

இனிமேல் இந்தியாவில் எந்த தப்பும் நடக்காது.

இந்தியா வல்லரசு ஆகிவிடும்.

   ஆனால் எனக்கு மட்டும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், பதில் வரவில்லை. நான் கடந்த ஆறு மாதத்தில் இரண்டு முறை விண்ணப்பித்து  விட்டேன். 

         எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னைக்காவது ஒரு நாள் பதில் வரும். என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது. பதில் வரும் பொழுது எல்லாம் முடிந்திருக்கும். 


திருப்பதி கோவிலின் கிளை அலுவலகம்...........................

        திருப்பதி கோவிலின் கிளை அலுவலகம் ( துணைக் கோவில் ) கன்னியாகுமரியில் 22 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது.

           இனி மேல் கோடிக்கணக்கில்  பணமும், கிலோ கணக்கில் தங்கமும் போட நினைப்பவர்கள் திருப்பதி கிளை அலுவலகத்தில் போடலாம். நீண்ட தூரம் அலையத் தேவையில்லை. 

Tuesday, June 4, 2013

நான் எதை எழுத?

எதை எழுத? 

நான் எதை எழுத? 

நீங்களே சொல்லுங்கள்
 
நான் எதை எழுத? 

கதை எழுதவா?

கவிதை எழுதவா?

எதை எழுத? 

என் 

கதை கருத்து சொல்லும் 

கவிதை காதல் சொல்லும்
 
நீங்களே சொல்லுங்கள் 

நான் எதை எழுத? 

கதை எழுதவா? கவிதை எழுதவா?


குறிப்பு : இந்த கவிதை கற்பனையே. என் கவிதை கருத்தும்

 சொல்லாது, காதலும் சொல்லாது.   

மழையின் தங்கை சாரல்


பெரு துளி - மழை 

சிறு துளி  - சாரல் 

மழை - அழகு

சாரல் - மிக அழகு

ழையின் தங்கை சாரல் 

பெண் என்றால் அழகு 

மழையைப் பெண் என்றால் அதன் அழகுக்கு அழகு சேர்ப்பது 

மழையே அழகு என்றால்  

அதன் தங்கையின் அழகைச் சொல்லவா வேண்டும். 

எவ்வர்று 

குழந்தையின் சிணுங்கலும் 

பெண்களின் அழகும் 

எல்லோருக்கும் எவ்வளவு பிடிக்குமோ?

அவ்வளவு சாரலும் பிடிக்கும். 

சாரல் - மழலைச் சிணுங்கல்    

Saturday, June 1, 2013

குற்றாலம் வாருங்கள்

குற்றாலம் வாருங்கள் 

 

குளிர்ந்த காற்று அனுபபியுங்கள் 

 

குற்றாலம் வந்தால் 

 

உங்கள் உடல் மட்டுமல்ல

 

உங்கள் உள்ளமும் குளிரும்.

 

அன்புடன் அழைக்கிறோம் 

 

குற்றாலம் வாருங்கள் 

 

 

 

 

வாழ்க்கை இன்னும் எத்தனை நாள்

எத்தனை நாள் 

 

வாழ்க்கை இன்னும் எத்தனை நாள் 

 

 மற்றவர்க்கு  நீ  என்ன செய்தாய் ?

 

இத்தனை நாள் 

 

சில நாள் படித்தாய் 

 

பல நாள் உழைத்தாய் 

 

சில நாள் மகிழ்ந்தாய் 

 

பல நாள் தவித்தாய் 

 

எத்தனை நாள் 

 

வாழ்க்கை இன்னும் எத்தனை நாள்

 

எல்லோரும் ஒன்று என நினைப்பாய்

 

இம்மையில் 

 

எல்லோருக்கும்  பொருள் கொடுப்பாய் 

 

மறுமையில்   

 

நீ மகிழ்வாய் ! மகிழ்வாய் !

Friday, May 31, 2013

வெப்பக் காற்று வீசுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை

 

மதுரை, தேனீ , ஊட்டி பகுதிகளில் கனமழை.

 

வெப்பக் காற்று வீசுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை.

 

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.

10 ஆம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்போம்

   10 ஆம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்போம்  - அப்துல் கலாம் .

 

   தாய் மொழியில் கல்வி கற்கும் பொழுது தான் புரிந்து படிக்க முடியும்.

 

  ஆங்கிலமும் தேவை தான். அதற்காக தாய் மொழி அழிவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது.

 

  ஜப்பானியர்  ஒருவர் தமிழ் அறிஞராக இருக்கிறார். நாம் தமிழ் மொழி வேண்டாம் என்கிறோம்.

 

  ஆங்கிலம் ஒரு மொழி தான். தமிழில் படித்து புரிந்து கொண்டால் அதனை எளிதாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.

 

  ஆங்கிலம் பேசும் சூழலில் ஒரு சில மாதங்கள் இருந்தால் எளிதாக யார் வேண்டுமானாலும் ஆங்கிலம் பேசலாம் . 

 

  எனக்குத் தெரிந்து ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் சிலர் தமிழிலும் சரியாக எழுத முடியாமல், ஆங்கிலத்திலும் சரியாக எழுத முடியாமல் தவிக்கிறார்கள்.

 

  பெற்றோர்களே  புரிந்து கொள்ளுங்கள். நாம் எல்லோரும் மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்தவர்களா? நாம் அனைவரும் நல்ல நிலையில் இல்லையா?

 

  என் மகனையும் ஆங்கில வழியில் படிக்க வைக்கிறேன் என்று பெருமையாக சொல்லிக் கொண்டால் போதுமா? உங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டாமா?

 

  +2 பாட த்தை இரண்டு வருடம் படிக்க வைத்து 100% தேர்ச்சி என்று சொல்வது பெரிதா? அல்லது +2 பாடத்தை ஒரு வருடம் சொல்லி கொடுத்து 98% தேர்ச்சி கொடுக்கும் அரசு பள்ளிகள் பெரிதா?

 

  படிக்காத மாணவர்களை படிக்க வைத்து தேர்ச்சி பெற வைப்பது தான் பள்ளி. நன்றாக படிக்கும் மாணவர்களை படிக்க வைப்பது பெரிய விஷயமல்ல.

 

படிப்பு படிப்பாக இருக்க வேண்டும். 

வெறுப்பாக இருக்கக் கூடாது.

 

       

Thursday, May 30, 2013

அன்பன் கவிதை தொகுப்புகள்

 

இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள

இங்கே கிளிக் செய்யவும்  

 


ஜாதகம் வேண்டாம்........ சாதிக்க வேண்டும்...............

ஜாதகம் பார்க்க வேண்டாம் 

சாதிக்க நினைத்தால்......... 

ஜாதகம் நம்மை மூடனாக்கும் 

முன்னேற்றத்தைத் தடுக்கும் 

ஜாதகம் - அறிவியல் 

பலித்தது - அந்தக் காலம் 

பணம் பறிக்குது - இந்தக் காலம்

வாழ்க்கையை வீணாக்கதீர்கள்  

ஜாதகம் என்னும் மூட நம்பிக்கையால் 

முன்னோர்கள் அறிவியலால் நடப்பதைச் சரியாக 
கணித்தார்கள் 

நம் வாழ்கையை வளமாக்க..........
 
பின்னவர்கள்  நம் மேல் ஜாதகத்தைத் திணித்தார்கள் 

அவர்கள் வாழ்கையை வளமாக்க ................


ஜாதகம் - முயற்சியின் முதல் தடைக்கல்

குறிப்பு : இது என்னுடைய கருத்து. ஏற்பதும், ஏற்காததும்
 
உங்களைப் பொறுத்து.


Wednesday, May 29, 2013

திறமை - சான்றிதழ்

சான்றிதழ்  இருக்கும் பலரிடம் திறமை இருப்பதில்லை


திறமை இருக்கும் சிலரிடம் சான்றிதழ் இருப்பதில்லை


சான்றிதழ் மட்டும் போதுமா?


திறமை வேண்டாமா?


சான்றிதழ் வேலையில் நுழைவதற்கு.........


திறமை வேலையில் நீடிப்பதற்கு.........


திறமை இருந்தால் வெற்றி!


திறமையும், சான்றிதழும் இருந்தால் 

 

வெற்றி! வெற்றி! வெற்றி!

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்