என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை.
மாணவர்கள் கொலை செய்யக் கூட துணிந்து விட்டார்கள்.
மாணவர்களிடம் பேசுவதற்க்கே பயமாக இருக்கிறது .
இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் - ஆசிரியர்களின் ஆசிரியர்கள் ஆகி விட்டார்கள்.
என்றைக்கு ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக் கூடாது என்ற நிலை வந்ததோ, அன்றிலிருந்து மாணவர்கள் செய்யும் குற்றங்கள் அதிகமாகி விட்டது.
மனம் மிகவும் வேதனை அடைகிறது.
இறக்கும் ஒரு நல்ல மனிதன், மேலும் ஒரு பத்து ஆண்டுகள் வாழ்ந்தால் இன்னும் எவ்வளவு நல்ல செயல்கள் நடக்கும்.
என் மகனுக்கு, எல்லா வசதியும் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்து, குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தால் அவர்கள் ஏன் தப்பு செய்ய மாட்டார்கள்.
மாணவனை அடித்தால் ஏன் அடித்தீர்கள் என்று ஒரு புறமும், அடிக்கவில்லை என்றால் ஏன் அடித்து சொல்லிக் கொடுக்கவில்லை என்றும் மறுபுறமும், கேட்க என்ன செய்வதென்று தெரியாமல் ஆசிரியர்கள் திண்டாடி வருகின்றனர்.
மேலும் ஒரு மாணவன் தப்பு செய்தான் என்று சொல்லி வகுப்பறைக்கு வெளியே நிற்கச் சொன்னால், அதை தலைமை ஆசிரியர் பார்த்தால் அனைத்து மாணவர்கள் முன்பாகவும் தலைமை ஆசிரியர், அந்த வகுப்பு ஆசிரியரை திட்டி விட்டு, தப்பு செய்த அந்த மாணவனை வகுப்பறைக்குள் போகச் சொன்னால், எப்படி அவன் திருந்துவான். மேலும் அதைப் பார்த்து மற்ற மாணவர்களும் நாம் தவறு செய்தால் யாரும் நம்மை ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்று நினைத்து அவர்களும் தப்பு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.
கடைசியில் தப்பு செய்த மாணவன் ஆசிரியரைப் பார்த்து கேவலமாக சிரிக்கிறான்,
இது தான் இன்றைய ஆசிரியர்களின் உண்மை நிலை.
கடவுளே 19ஆம் நூற்றாண்டு காலத்து பள்ளிக்கூட அமைதி திரும்ப வராதா?
Ithu than en nilamai...
ReplyDeleteஆசிரியராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு படிப்படியாக குறைந்து வருகிறது.
Deleteபணம் படுத்தும் பாடு...!
ReplyDeleteபணத்தால் எவ்வளவு பிரச்சனை.....................
Deleteஎன்று சேவையிலிருந்து மாறி தொழிலாக மாறி விட்டதோ.... இனி மாற்றம் வருவது சிரமம் தான்...
ReplyDeleteஉண்மை
Deletecorrectly said Thiru. Dhanapalan.-Ganesan.
Delete