பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Thursday, January 31, 2013

உடல் தானம் செய்வீர்

 

நீங்கள் உடல் தானம் செய்ய  விரும்பினால் கீழ்க்கண்ட வலைதளத்திற்கு சென்று பார்க்கவும்.

 

Click Here

http://www.dmrhs.org/tnos/donor-card-download

திருப்பதி லட்டு - கல்யாண லட்டு

      திருப்பதி லட்டை ஒரு காலத்தில் ‘மனோகரம்’ என்று அழைத்தார்கள். தினமும் உத்தேசமாக 6ஆயிரம் கிலோ கடலை மாவு, 12 ஆயிரம் கிலோ சர்க்கரை, 750 கிலோ முந்திரி பருப்பு, 200 கிலோ ஏலக்காய், 500லிட்டர் நெய், 30 கிலோ எண்ணெய், 500 கிலோ கற்கண்டு, 600 கிலோ உலர்ந்த முந்திரி மற்றும் 50 கிலோ பாதாம் பருப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.


        இந்த பொருட்களுக்கு மட்டும் உத்தேசமாக ரூ.12 லட்சம் செலவாகும். ஒரு லட்டு சராசரியாக ரூ.10க்கு விற்கப்படுகிறது. வி.ஐ.பி.களுக்கு கூடுதல் விலையில் லட்டு விற்கப்படுகின்றன.

 

     கடந்த 2006ம் ஆண்டில் லட்டு விற்பனை மூலம் 75 கோடியும், 2007ல் 103 கோடியும், 2009ல் 125 கோடியும் வருமானமாக கிடைத்தது. கோயிலுக்குள் தரிசனம் முடிந்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிராசதமாக தரப்படும் லட்டு 100 கிராம் எடையுடையது.

 

  இதை கோயிலுக்குள் உள்ள ‘பொடு’ என அழைக்கப்படும் மடப்பள்ளியிலேயேபாரம்பரியமாக அர்ச்சகர்கள் தயாரித்து வருகின்றனர். கடந்த 300 ஆண்டுகளாக இந்த பணி நடப்பதாக கூறப்படுகிறது. இந்த லட்டை ‘கல்யாண லட்டு’ என்றும் சொல்வார்கள்.

 

    இது அரைக் கிலோ எடைகொண்டது. லட்டு தயாரிப்பு பொருட்களும், தயாரிக்கப்பட்ட லட்டுகளும் கிரேன் மூலமாக வினியோக இடத்திற்கு எடுத்துச்செல்லப் படுகிறது. லட்டு தயாரிப்புக்குரிய வாசனைப் பொருட்கள் கொச்சியில் கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற பொருட்கள் ஏல முறையில் வாங்கப்படுகிறது.

 

Tuesday, January 29, 2013

திருநீறு அணிவது ஏன்?

   அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. 


     எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது. 

 

          இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள். 

 

      தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். பறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது. 

 

      இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

 

         சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, மூளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா! 

 

     நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. 

 

      இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது. 

 

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்


1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.

 

    மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

 

Wednesday, January 23, 2013

கோவில்கள்-அறிவியல் பூர்வமான உண்மை

     இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் உண்டு. ஆனால் அவையனைத்தும் வேத வழியில் கட்டப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்பட வேண்டும். அது கிராமமாகவோ, நகரமாகவோ, மலை மீதோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

         பூமியின் வட தென் துருவ காந்த அலை எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு கட்டப்பட வேண்டும். முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் (அ) மூலஸ்தானத்தில் இந்த அலை அதிகமாக இருக்கும். சரியாகச் சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம் பெற்ற பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும். இந்த இடத்தில் தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் செதுக்கி புதைக்கப்படும். 

      இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்றால் காந்த அலைகளை அது சுற்றிலும் பரப்பவே. எனவே ஒருவர் தொடர்ந்து கோவிலுக்கு சென்று சிலையை வலப்புறமாக சுற்றி வந்தால் அவர் பூமியின் காந்த ஆற்றலைப் பெறுவார். அவரின் உடல் அந்த ஆற்றலை கிரகித்துக் கொள்ளும். இவ்வாற்றல் அவர் நலமுடன் வாழ வழி வகுக்கும். இது அறிவியல் பூர்வமான உண்மை.

       மேலும் கர்ப்பக்கிரகம் மூன்று திசையிலும் மூடப்பட்டுள்ளதால் ஆற்றலை அதிகப்படுத்தும். மூலஸ்தானத்திலிருக்கும் விளக்கும் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும். மணியோசை பக்தர்களின் மனதினை அலைபாய விடாமல் ஒன்றியிருக்கச் செய்யும். இது மன அழுத்தினைக் குறைக்கும். மேலும் மணம் வீசும் மலர்கள் ஒருவிதமான நல்ல ஆராவை (Aura – ஒருவரைச் சுற்றியுள்ள மனித காந்த சக்தி) வெளிப்படுத்தும். 

       கடவுளின் சிலைகளை கற்பூரம், துளசி மற்றும் பிற பொருள்களைச் சேர்த்து கழுவி அந்த நீரை தீர்த்தமாகத்தருவார்கள். அதில் மிக அதிகமான காந்த சக்தியுள்ளது.அத்தீர்த்தத்தினை தாமிரப் பாத்திரத்திலிட்டுத் தருவார்கள். இது பற்சொத்தை மற்றும் சளி, இருமல் மற்றும் வாய் துர் நாற்றத்தினைப் போக்கவல்லது. இதன் மூலம் நமது முன்னோர்கள் பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளார்கள். மேலும் தீபாரதனை காட்டும் போது மிக அதிகமான சக்தி வெளிப்படும் எனவேதான் ஆண்களை சட்டையில்லாமலும் பெண்களை அதிக அணிகலன்களோடும் கோவிலுக்கு வரச் சொன்னார்கள்.

 

மாணவர் கைவண்ணம்


Tuesday, January 22, 2013

பணம்-கல்வி

 

பணம் வரும் போகும்.

கல்வி வரும் போகாது.


 

கொடுக்கிற தெய்வம் 

கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள்.

எங்கள் வீடு  ஓட்டு  வீடு 

என்பதால் தெய்வம் மறந்து விட்டதோ? என்னவோ? 


படித்ததில் பிடித்தது 


Friday, January 11, 2013

எட்டாவது கண்டம்

       உலகில் மொத்தம் எத்தனை கண்டங்கள் இருக்கின்றன என்று கேட்டால் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகிய ஏழு கண்டங்கள் உள்ளன என்று அனைவரும் சொல்லி விடுவார்கள். ஆனால் வில்லியம் பீப் என்ற அறிஞரோ உலகில் மொத்தம் எட்டு கண்டங்கள் இருக்கின்றன என்கிறார். 

     இந்த எட்டாவது கண்டம் யாருக்கும் தெரியாத ஒன்று. இது தரையில் இருந்து 200 அடி உயரத்தில் இருக்கிறது என்கிறார். இது ஒரு வித்தியாசமான உலகம் என்றும் கூறுகிறார். இந்த உலகில் 100,200 அடி உயரம் வளர்ந்து நிற்கும் மரங்கள் லட்சகணக்கான சதுர மைல்களில் பரவி நிற்கின்றன. இந்த மரங்களின் உச்சியில் ஏராளமான உயிரினங்கள் உள்ளன.

அதுதான் உலகின் எட்டாவது கண்டம் என்கிறார் அவர். 1980ம் வருடம் வன ஆராய்ச்சியாளர் டெர்ரி இர்வின் அமேசான் காடுகளில் அலைந்த போது அவர் மீது சில பூச்சிகள் வந்து விழுந்தன. அந்த பூச்சிகளை பற்றி இதற்கு முன் அவர் தெரிந்து வைத்திருக்கவில்லை. பூச்சிகள் சம்பந்தமான புத்தகங்களிலும் அவற்றை பற்றிய குறிப்பு இல்லை. அது இதுவரை உலகம் அறிந்திராத புதுவகையான பூச்சியினம்.

      அதிசயித்து போன இர்வின், மரத்தின் மீது ஏறி அதன் உச்சியை ஆராய்ந்தார். என்னவொரு ஆச்சர்யம். அங்கு இதுவரை காணாத பல புதிய பறவைகள், பூச்சிகளை கண்டுபிடித்தார். அடர்த்தியான மரக்கிளைகள் இருப்பதால் பறவைகளோ, பூச்சுகளோ கீழே வர வாய்ப்பு இல்லை. மரத்தின் உச்சியிலே இனப்பெருக்கம் செய்து அங்கேயே வளர்ந்து அங்கேயே அவை மடிந்து போகின்றன. மனிதன் மேலே ஏறி பார்த்தால்தான் புதிய இன கண்டுபிடிப்புகள் சாத்தியம்.

   எட்டாவது கண்டத்தில் மட்டும் 3 கோடி உயிரினங்கள் இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள். இவற்றை ஆராயும் பணிக்கு ‘காட்டுக்கூரை’ என்று ஐக்கிய நாடுகளின் இயற்கை பராமரிப்பு நிறுவனம் பெயரிட்டிருக்கிறது. இந்த காடுகளின் கூரை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த எட்டாவது கண்டத்தில் மனிதனின் ஏதாவது ஒரு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கலாம் என்று இந்த ஆராய்ச்சி நம்புகிறது.

Wednesday, January 9, 2013

முத்துகள் எப்படி உருவாகின்றன?

   இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது.முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு? முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விஷயம்.

     கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை அதன் மீது சுரந்து மூடிவிடும்.அதைத் தெரிந்துகொண்ட சீனர் கள், சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள். சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது, முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும்.

    ஜப்பானியர்கள், சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள். அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து, நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்பனையாகிறது.

     இனி, உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன என்று பார்க்கலாம். கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன. அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. ஆனால் முந்தைய முறையில் உற்பத்தியாகும் முத்துதான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.


Tuesday, January 8, 2013

பாக்டீரியா உருவாக்கும் சுத்த தங்கம்..

      தங்கம் என்ற மஞ்சள் உலோகம் இன்றைக்கு அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. மண்ணில் சுரங்கம் அமைத்து தோண்டி பின்னர் சுத்திகரிக்கப்பட்டுதான் தங்கம் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மிகத் தூய்மையான தங்கமான 24 கேரட் தங்கத்தை பாக்டீரியா ஒன்று உருவாக்குகிறது என்ற ஆச்சரியமான தகவலை கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

         அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகலத்தின் மைக்ரோ பயாலஜி மற்றும் மாலிக்யூலர் ஜெனடிக்ஸ் துறை ஆராய்ச்சியாளர்கள் இணைந்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வில் பாக்டீரியா ஒன்று சுத்தமான தங்கம் உருவாக்குவதை கண்டறிந்தனர். இந்த பாக்டீரியாவுக்கு ‘குப்ரியாவிடஸ் மெட்டாலிடியுரன்ஸ்’ என பெயரிட்டுள்ளனர்.

      தங்களின் கண்டுபிடிப்பை ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்ற ‘பிரிக்ஸ் ஆர்ஸ் எலக்ட்ரானிக்கா’ என்ற கண்காட்சியில் காட்சிக்கு வைத்தனர். ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட தங்கத்தைக் கொண்டு தங்க முலாம் பூசப்பட்ட ஒரு பொருளையும் காட்சிக்கு வைத்திருந்தனர். ‘த கிரேட் ஒர்க் ஆஃப் மெட்டல் லவ்வர்’ என்ற பெயரில் பாக்டீரியா உருவாக்கிய தங்கம் காட்சிக்கு வைக்கப்பட்டது.
 
      உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த மைக்ரோ பயாலஜி விஞ்ஞானிகள் இதை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். ஆய்வு முடிவு பற்றி பல்கலைக்கழக மைக்ரோபயாலஜி பேராசிரியர் கசம் கஷேபி கூறியதாவது: பொதுவாக பாக்டீரியாக்கள் நச்சுத்தன்மையுள்ள பொருட்களில் வளர்வதில்லை. ஆனால் இந்த பாக்டீரியா இயற்கையில் காணப்படும் நச்சுத்தன்மையுள்ள தங்க குளோரைடு என்ற வேதிப்பொருளில் வளர்கிறது. இந்த தங்க குளோரைடு நீர்ம தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பாக்டீரியாவை தங்க குளோரைடில் வளர்த்தபோது ஒரே வாரத்தில் தங்க குளோரைடு நீர்மமானது தங்கக்கட்டியாக மாற்றமடைந்தது. இயற்கையில் தங்கம் எப்படி உருவாகிறதோ, அதேபோன்ற ரசாயன வினை இங்கும் நடந்திருக்கிறது என்று கூறினார்.

       24 கேரட் பரிசுத்தமான தங்கத்தை பாக்டீரியா உருவாக்குகிறது என்ற கண்டுபிடிப்பு மிக மிக முக்கியமானது. அதே நேரம், இந்த தொழில்நுட்பத்தில் தங்கத்தை உருவாக்குவது சவாலானது, அதிக செலவு ஏற்படுத்தக்கூடியது. பெரிய அளவில் உற்பத்தி செய்யும்போது செலவு கட்டுப்படுத்தப்படலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

    தொழில் ரீதியான உற்பத்திக்கு பாக்டீரியா என்ற உயிரை பயன்படுத்தலாமா?. சுரங்கம் அமைத்து வெட்டி எடுக்கப்படும் தங்கத்தை பாக்டீரியாவை கொண்டு உருவாக்கினால் உலக அளவில் பொருளாதாரத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுமா.. என பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்த ஆராய்ச்சி.

Wednesday, January 2, 2013

நல் வருடம் - இந்த புது வருடம்

பழையது மறைந்தால் புதியது

 

பழைய வருடம் மறைந்தால்  புது வருடம் 


வருடம் 


வருடம் 


புது வருடம் 


வறுமைகள் நீக்கும் 


வாழ்வு செழிக்கும் 


மகிழ்ச்சி பிறக்கும் 


நல்  வருடம்  - இந்த புது வருடம் ...........


புது வருடத்தில்  எங்கும் மகிழ்ச்சி பரவட்டும்.......................


முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவுவோம்..................

இந்த புது வருடத்தில்