பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Tuesday, January 8, 2013

பாக்டீரியா உருவாக்கும் சுத்த தங்கம்..

      தங்கம் என்ற மஞ்சள் உலோகம் இன்றைக்கு அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. மண்ணில் சுரங்கம் அமைத்து தோண்டி பின்னர் சுத்திகரிக்கப்பட்டுதான் தங்கம் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மிகத் தூய்மையான தங்கமான 24 கேரட் தங்கத்தை பாக்டீரியா ஒன்று உருவாக்குகிறது என்ற ஆச்சரியமான தகவலை கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

         அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகலத்தின் மைக்ரோ பயாலஜி மற்றும் மாலிக்யூலர் ஜெனடிக்ஸ் துறை ஆராய்ச்சியாளர்கள் இணைந்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வில் பாக்டீரியா ஒன்று சுத்தமான தங்கம் உருவாக்குவதை கண்டறிந்தனர். இந்த பாக்டீரியாவுக்கு ‘குப்ரியாவிடஸ் மெட்டாலிடியுரன்ஸ்’ என பெயரிட்டுள்ளனர்.

      தங்களின் கண்டுபிடிப்பை ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்ற ‘பிரிக்ஸ் ஆர்ஸ் எலக்ட்ரானிக்கா’ என்ற கண்காட்சியில் காட்சிக்கு வைத்தனர். ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட தங்கத்தைக் கொண்டு தங்க முலாம் பூசப்பட்ட ஒரு பொருளையும் காட்சிக்கு வைத்திருந்தனர். ‘த கிரேட் ஒர்க் ஆஃப் மெட்டல் லவ்வர்’ என்ற பெயரில் பாக்டீரியா உருவாக்கிய தங்கம் காட்சிக்கு வைக்கப்பட்டது.
 
      உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த மைக்ரோ பயாலஜி விஞ்ஞானிகள் இதை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். ஆய்வு முடிவு பற்றி பல்கலைக்கழக மைக்ரோபயாலஜி பேராசிரியர் கசம் கஷேபி கூறியதாவது: பொதுவாக பாக்டீரியாக்கள் நச்சுத்தன்மையுள்ள பொருட்களில் வளர்வதில்லை. ஆனால் இந்த பாக்டீரியா இயற்கையில் காணப்படும் நச்சுத்தன்மையுள்ள தங்க குளோரைடு என்ற வேதிப்பொருளில் வளர்கிறது. இந்த தங்க குளோரைடு நீர்ம தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பாக்டீரியாவை தங்க குளோரைடில் வளர்த்தபோது ஒரே வாரத்தில் தங்க குளோரைடு நீர்மமானது தங்கக்கட்டியாக மாற்றமடைந்தது. இயற்கையில் தங்கம் எப்படி உருவாகிறதோ, அதேபோன்ற ரசாயன வினை இங்கும் நடந்திருக்கிறது என்று கூறினார்.

       24 கேரட் பரிசுத்தமான தங்கத்தை பாக்டீரியா உருவாக்குகிறது என்ற கண்டுபிடிப்பு மிக மிக முக்கியமானது. அதே நேரம், இந்த தொழில்நுட்பத்தில் தங்கத்தை உருவாக்குவது சவாலானது, அதிக செலவு ஏற்படுத்தக்கூடியது. பெரிய அளவில் உற்பத்தி செய்யும்போது செலவு கட்டுப்படுத்தப்படலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

    தொழில் ரீதியான உற்பத்திக்கு பாக்டீரியா என்ற உயிரை பயன்படுத்தலாமா?. சுரங்கம் அமைத்து வெட்டி எடுக்கப்படும் தங்கத்தை பாக்டீரியாவை கொண்டு உருவாக்கினால் உலக அளவில் பொருளாதாரத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுமா.. என பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்த ஆராய்ச்சி.

3 comments:

  1. நண்பரே உங்களை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு பெருமை கொள்கிறோம் . நேரம் இருந்தால் வந்து பாருங்கள் நன்றி

    http://blogintamil.blogspot.com/2013/01/2517.html

    ReplyDelete
  2. தகவலுக்கு மிக்க நன்றி !!

    ReplyDelete