உடலின் தொடர்பு இதயம்
உணர்வுகளின் உதயம் - இதயம்
நம் உயிர் அதன் பிணையம்
அளவில் சிறியது
உடலின் அனைத்து அதிகாரமும் கொண்டது
சுருங்கினால் சிஸ்டோல்
பழைய நிலைக்குத் திரும்பினால் டைய்ஸ்டோல்
லப் டப் இதன் ஒரு மொழி
இதற்கில்லை மறு மொழி
லப் என்றால் நீண்டு ஒலிக்கும்
டப் என்றால் குறுகி ஒலிக்கும்
நம் உயிர் இதயத்தில்
இதயத்தின் உயிர் நம் மணிக்கட்டில்
உடல் உறுப்புகளுக்கு இரத்தம் அனுப்பும்
நிமிடத்தில் 72முறை துடிக்கும்
இரக்கம் உண்டு, உறக்கம் இல்லை
நம் வாழ்வு, இதய வால்வில் உள்ளது
வால்வில் அடைப்பு, உண்டாக்கும் மாரடைப்பு
நல்ல இதயம் = நல்ல உணவு, நல்ல உடற்பயிற்சி
how u think like dis i really wondering!
ReplyDelete