பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Thursday, October 18, 2012

தென்றல்

  கவிஞனின்

கண்கள்

வறண்ட பாலையை

கவிதையால்

சோலை செய்யும்

குற்றாலத்தின்

தென்றல்

வறண்ட வாழ்க்கையை

லேசான தழுவலால்

துளிரச் செய்யும்

மலைகள்

காடுகள்

ஆறுகள்

குளங்கள் என உலகின்

அனைத்து மீதும்

தவழ்ந்து விளையாடும் குழந்தை

தென்றல்

வழியில் செல்லும்

அனைவருக்கும்

முத்தமிடும் மழலை

தென்றல்

பூக்களின்  உயிர் தென்றல்

இப்பூவுலகத்தின்  உயிர் தென்றல் 

காற்றில் வரும் தென்றல் 

கல் நெஞ்சைக் கரைக்கும் தென்றல் 

இசைக்கு மயங்காதோர் இருக்கலாம்  

இன்பத் தென்றலுக்கு மயங்காதோர் 

இப்பூவுலகில்  இல்லை 

எங்கே தென்றல் இருக்கிறதோ 

அங்கே மக்கள் கூட்டம் இருக்கும் 


தென்றல் - மழலைத் தழுவல் 

 

 

No comments:

Post a Comment