
ஐந்தாம் நூற்றாண்டின் மத்தியில் மக்கள் ஆட்டுத்தோலை பதப்படுத்தி எடுத்த வரை தோலிலும் கன்றுத் தோலில் இருந்து தயாரித்த மெல்லிய தாளிலும் எழுதத் தொடங்கினர். தோலின் ஒரு பக்கம் மட்டும் எழுதப்பட்டது.
மத்திய காலத்தில் பெரும்பான்மையான புத்தகங்கள் லத்தீன் மொழியில் எழுதப்பட்டன. பின்னர் காகிதத்தின் தரம் மேம்பட்டது. அச்சுக்கலையும் வளர்ச்சியுற்றது. இதன் பயனாக புத்தகம் இன்றைய உருவை அடைந்தது. இப்போது வண்ண வண்ணமாக அச்சிடப்பட்ட அழகான புத்தகங்கள் வெளி வரத் தொடங்கியுள்ளது.
உலகின் மிகப்பெரிய புத்தகம் 'த லிட்டில் ரெட்'. வில்லியம் பி.உட் என்பவரால் எழுதி வெளியிடப்பது. 7 அடி 2 அங்குல உயரம் கொண்ட இப்புத்தகத்தை திறந்தால் இது பத்தடி நீளத்துக்கு விரியும். 1800 முதல் 1900 வரை பிரிட்டீஸ் பாராளுமன்ற நடவடிக்கைகளை ஐரிஸ் பல்கலைக்கழக அச்சகம் 1200 பகுதிகளாக வெளியிட்டுள்ளது.
ஒரே விஷயத்தில் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய புத்தகம் இதுவே. இதன் எடை 364 மெட்ரிக் டன். விலை 50 லட்ச ரூபாய். வெளியிட்ட காலம் 1967 முதல் 1971 வரை. தினமும் 10 மணி நேரம் இடை விடாமல் படித்தாலும் இந்த புத்தகத்தை முழுவதுமாக படித்து முடிக்க 6 வருடங்கள் ஆகும்.
ஆஹா! மிக மிக அற்புதமான பதிவு, இன்று இந்த பதிவு வலைச்சரத்தில் பகிரப்பட்டுள்ளது. அங்கு பார்த்துவிட்டுதான் வந்தேன். சூப்பர்.
ReplyDeleteநிறைய எழுதி இருக்கீங்க இதுநாள்வரை கவனிக்காமல் இருந்திருக்கிறேன். இதோ இப்போது முதல் உங்களை பின்தொடர்ந்து வந்து முடிந்தவரை படிக்கிறேன்.
உங்களுக்கு நேரம் கிடைத்தால் எனது பக்கமும் வந்து போகவும்.
http://semmalai.blogspot.com/
நன்றி
Deleteநன்றி
ReplyDelete