செயற்கை பாக்டீரியா |
இந்த நிலையில் உலகின் முதல் செயற்கை உயிரி என்று வர்ணிக்கப்படுகின்ற ஒரு பாக்டீரியாவை விஞ்ஞானிகள் படைத்திருக்கிறார்கள். அதாவது முதலில் ஒரு பாக்டீரியாவுக்கான மரபணு கட்டமைப்பை கணிணி மென்பொருள் துணையுடன் வடிவமைத்தனர். பின் அதில் செயற்கையாக ரசாயனங்களை கலந்து அதை ஓர் உயிரணுக்குள் செலுத்தினார்கள். இதன் மூலம் செயற்கையாக ஓர் உயிரியை உருவாக்கி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இந்த செயற்கை உயிரிக்கு சிந்தியா என்று பெயர் வைத்துள்ளனர்.
அமெரிக்காவில் மேரிலாண்ட் மற்றும் கலிபோர்னியா மாகாணங்களில் இருந்து செயல்படும் ஜே.சி.வி.ஜ. என்ற ஆராய்ச்சி கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஒற்றை செல் செயற்கை உயிரியை உருவாக்கியுள்ளனர்.
முதலில் மைகோபிளாஸ்மா மைகாயிட்ஸ் எனப்படும் பாக்டீரியாவின் மரபணுவை மாற்றம் செய்வதன் மூலம் மைகோபிளாஸ்மா காப்ரிகாலம் என்ற பாக்டீரியாவை உருவாக்கினார்கள். இதன் டி.என்.ஏ. அமைப்பை போன்ற மாதிரி வடிவத்தை கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மூலம் வடிவமைத்தனர். இந்த செயற்கை டி.என்.ஏ.வில் சில ராசாயனங்களை கலந்து ஒற்றை செல் உயிரியை உருவாக்கினார்கள்.
இந்த பாக்டீரியாவின் மரபணு பாரம்பரியம் என்பது ஒரு கணிணிதான். ஆகவே செயற்கையாக படைக்கப்பட்ட முதல் உயிரி வடிவம் என்றால் அது நிச்சயமாக இதுதான் என்கிறார். இதை படைத்திருக்கும் குழுவின் தலைவர் டாக்டர் கிரெய்க் வெண்டர்.
இந்த ஆய்வின் மூலம் செயற்கை பாக்டீரியாக்களை உருவாக்கி மருந்துகள் தயாரிக்க முடியும். அதேநேரம் செயற்கை உயிரினங்களால் உலகத்துக்கு பெரிய ஆபத்துகளும் வரலாம் என்று சொல்லப்படுகிறது. இப்படி செயற்கையாக உயிரிகளை படைத்தது சரியா?,தவறா? என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.
\\பின் அதில் செயற்கையாக ரசாயனங்களை கலந்து அதை ஓர் உயிரணுக்குள் செலுத்தினார்கள். \\ உயிரணுவுக்கு உயிர் இருந்ததா? அப்புறம் எப்படி அது செயற்கை உயிரி ஆகும்?
ReplyDelete