பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Saturday, December 15, 2012

நேசியுங்கள் கவிதை மலரட்டும்.

 

யோசித்துப் பார்த்தேன் 

கவிதை மலரவில்லை 

நேசித்துப்  பார்த்தேன் 

கவிதை மலர்ந்தது 

கவிஞனுக்குத் தெரியும் 

கவிதையின் சுவாசம் நேசம் என்று 

அம்மாவை நேசித்தேன் - அன்புக் கவிதை 

நண்பனை நேசித்தேன் - நட்புக் கவிதை 

உறவுகளை நேசித்தேன் - உணர்ச்சிக் கவிதை 

உலகை நேசித்தேன் - சமாதானக் கவிதை 

ஆகவே 

யோசியுங்கள் கண்டுபிடிப்புகள் உருவாகும் 

நேசியுங்கள் கவிதைகள் உருவாகும் 

பிறரை(எதிரியை) நேசியுங்கள் 

அவர்கள் யோசிப்பார்கள் 

 

யோசியுங்கள் கண்டுபிடிப்புகள் உருவாகட்டும் , நேசியுங்கள் கவிதைகள் மலரட்டும்.  


No comments:

Post a Comment