பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Friday, April 5, 2013

உலகின் மிக லேசான பொருளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை

               பீஜிங்: உலகின் மிக லேசான பொருளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கார்பன் ஏரோ ஜெல் என அழைக்கப்படும் இப்பொருள் காற்றின் எடையை விட 6ல் ஒரு பங்கே எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் ஜி ஜியாங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உலகின் மிக லேசான பொருளை உருவாக்கியுள்ளனர். காற்றின் எடையில் 6ல் ஒரு பங்கு எடையே கொண்ட இந்த ஏரோஜெல் எனப்படும் பொருள் 0.16 மி.கி/கன செ.மீ., எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக மிகவும் எடை கொண்ட பொருளாக கருதப்பட்ட கிராபைட் ஏரோஜெல் எடையை விட கார்பன் ஏரோ ஜெல் மிகவும் எடை குறைவானதாகும். 

 

              முன்னதாக, கடந்த ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கிராபைட் ஏரோஜெல்லை உருவாக்கினர். இதன் எடை 0.18 மி.கி/கன செ.மீ., ஆகும். இத்தகைய ஏரோஜெல்கள், செமி சாலிட் ஜெல்லை காயவைத்து உருவாக்கப்படுகின்றன. இதன்காரணமாக இவற்றின் உட்பகுதிகள் காற்றால் நிரம்பியிருப்பதால், இவை மிகவும் எடை குறைந்ததாக உள்ளன.


        கார்பன் ஏரோஜெல்கள் மிகவும் நீட்சித்தன்மை கொண்டவை. கார்பன் ஏரோஜெல்லை அழுத்தும் போது அதற்கு மீளும் தன்மை உண்டு. எண்ணெய் உறிஞ்சும் தன்மை மிக அதிகம் கொண்ட பொருள் கார்பன் ஏரோஜெல். தற்சமயம் உபயோகத்தில் இருக்கும் எண்ணெய் உறிஞ்சும் கொண்ட பொருட்கள் தனது எடையில் 10 மடங்கு அளவு உறிஞ்சும் தன்மை கொண்டவை. ஆனால் கார்பன் ஏரோஜெல் தனது எடையில் 900 மடங்கு அதிக அளவு எண்ணெய் உறிஞ்சும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பண்பு காரணமாக, மாசு கட்டுப்பாட்டில் இந்த பொருள் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. நல்லதொரு தகவலுக்கு நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்....

    ReplyDelete

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்