பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Friday, July 12, 2013

என் அப்பாவிடம் கேட்டேன்...

 

என் அப்பாவிடம் 

 

எனக்கு பிடித்த லட்டு கேட்டேன்...
வாங்கிகொடுத்தார் 

எனக்கு பிடித்த பொம்மை கேட்டேன்...
வாங்கிகொடுத்தார் 

எனக்கு பிடித்த புத்தாடை கேட்டேன்...
வாங்கிகொடுத்தார்  

எனக்கு பிடித்த சைக்கிள் கேட்டேன்...
வாங்கிகொடுத்தார்
 

எனக்கு பிடித்த இரு சக்கர வாகனம் கேட்டேன்...
வாங்கிகொடுத்தார்

இப்படி எல்லாம் வாங்கி கொடுத்த என் அப்பாவிடம் 

எனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கச் சொன்னேன்.

முடியாது என்று சொல்லி விட்டார்.

என்னோடு சில நிமிடங்கள்(அ)சில நாட்கள் இருக்கும் எனக்கு பிடித்த
எல்லாவற்றையும் வாங்கி கொடுத்த என் அப்பா..........

என் வாழ்நாள் முழுவதும் என்னோடு இருக்கும் எனக்கு பிடித்த
பெண்ணை திருமணம் செய்ய மட்டும் ஏன் மறுக்கிறார்?

அவர் (அ) அவர்கள்  மட்டும் சரி என்று சொல்லி இருந்தால்

பலர்

காதல் திருமணம்  - நிச்சயிக்கப்பட்ட திருமணமாக மாறியிருக்கும். 

16 comments:

  1. Replies
    1. கருத்துக்கு நன்றி

      Delete
  2. மாறி இருக்கலாம் - அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து...

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி

      Delete
  3. உங்கப்பா ஒத்துக்கிடாலும் பொண்ணோட அப்பா ஒத்துக்கணுமே

    ReplyDelete
    Replies
    1. இப்படி அப்பாக்கள் ஒத்துக் கொள்ளாததால் தான் பதிவுத் திருமணம் நடக்குது.

      Delete
  4. வலைப்பக்க அமைப்பு நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி

      Delete
  5. இந்த அப்பாக்களே இப்படித்தான்....

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி

      Delete
  6. நீங்கள் முதலில் கேட்ட எல்லாப் பொருட்களும் உயிரில்லா என்றும் மாறா தன்மை கொண்ட பொருட்கள் ஆனால் பெண்களின் குணம் அவர்களின் குடும்பத்தை பொருத்ததும் அவர்களின் நண்பர்களை பொருத்தும் மாறிக் கொண்டே இருக்கும். அந்த சூழ்நிலையில் நீங்கள் இளமையில் ஒரு பெண்ணை விரும்பினால் அது கவர்ச்சியினால் ஏற்பட்ட ஈர்ப்பு என்று கருதிதான் அதற்கு தடை போடுகிறார்கள் அவ்வளவுதாங்க

    ReplyDelete
    Replies
    1. ஈர்ப்பினால் வந்த (காதலாகவே)பெண்ணாகவே இருக்கட்டும். அவர்கள் எல்லோரும் சரியாக இருக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. சரி எல்லாம் பார்த்து செய்து வைக்கப்பட்ட பெண் மட்டும் நல்லவர்கள் தான் என்று எப்படி சொல்ல முடியும். அப்படி ஒரு வேலை நீங்கள் பார்த்த பெண் சரியில்லை என்றால், உங்கள் பிள்ளை அந்த பெண்ணோடும் இல்லாமல், காதலியுடனும் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும்.

      Delete
  7. கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  8. நீங்கள் சொல்வது சரிதான் ... லட்டோ, பொம்மையோ, உடம்புக்கு ஆகாதென்றோ, நம் வருமானத்திற்கு ஏற்றதல்ல தடை போடாமல் வாங்கிக் கொடுக்கும் தவறை பல பெற்றோர் செய்வதாலேயே பின்னர் எது வேண்டுமென்றாலும் கேட்டால் கிடைத்துவிடும் எனக் கருதுகின்றனர் இக்காலப் பிள்ளைகள்...அதற்காக காதலுக்கு எதிரியல்ல...அது காதலா, இனக்கவர்ச்சியா என்பதுதான் பிரச்சனையே...எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் காத்திருந்து சமாளிக்கும் திறம் பெற்று வாழ்க்கையில் முன் வந்து காட்டுவதே உண்மைக் காதல்...

    ReplyDelete
    Replies
    1. mamdam u r really great. u comment is practical.

      எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் காத்திருந்து சமாளிக்கும் திறம் பெற்று வாழ்க்கையில் முன் வந்து காட்டுவதே உண்மைக் காதல்...

      True line............. i am very proud, bcz. ur comment is heart touching.......

      Delete
  9. தமிழ் கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. கவிதை ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நான் சமீபத்தில் http://www.valaitamil.com/literature_poem என்ற இணையதளத்தை பார்த்தேன். அதில் கவிதை தொகுப்புகள் அழகாக கொடுக்கப்பட்டிருந்தது.

    ReplyDelete

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்